ரூ.10 லட்சத்தில் குப்பை அள்ளும் வண்டிகள்

சீர்காழி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சத்தில் குப்பை அள்ளும் வண்டிகள் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்

Update: 2023-06-19 18:45 GMT

திருவெண்காடு:

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் வண்டிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ஜனகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து வரவேற்றார். இதில் சீர்காழி ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கலந்துகொண்டு குப்பை அள்ளும் வண்டி மற்றும் உபகரணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன் மற்றும் அலுவலக, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்