ஈரோடு முனிசிபல்காலனி பிரபா தியேட்டர் ரோட்டில் சாலையோரமாக குப்பை குவிந்து கிடக்கிறது. அங்கு மரக்கிளைகள், சாக்குமூட்டைகள், வாகன இருக்கைகள் போன்ற பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளன. காற்று வேகமாக அடித்தால் குப்பைகள் பறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். மேலும், குப்பை குவிந்து இருப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.