சுங்குவார்சத்திரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சுங்குவார்சத்திரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.;

Update:2023-03-17 14:33 IST

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுங்குவார் சத்திரத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-

ஊராட்சியில் பல பகுதிகளில் இது போல ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றமல் அலட்சியம் காட்டுகிறது. பல முறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்