சந்தைமேடு நிழற்குடை அருகே குப்பைகள் அகற்றம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சந்தைமேடு நிழற்குடை அருகே குப்பைகள் அகற்றப்பட்டது.
கே.வி.குப்பம் அருகே சந்தைமேடு பகுதியில் உள்ள நிழற்குடை அருகில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டது. இதனால் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.