படகு இல்லத்தில் குப்பைகள் அகற்றம்
ஏலகிரி மலை படகு இல்லத்தில் குப்பைகள் அகற்றப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் இடமாக படகு சவாரி இல்லம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ையில் உள்ள படகு இல்லத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் இருப்பது கண்டு அதனை உடனடியாக அகற்ற ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று ஏலகிரி மலை படகு இல்லத்தில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் மற்றும் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் ஆகியோர் சென்று அங்குள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.