போடி பெருமாள் கோவிலில் கணு உற்சவ விழா

போடி பெருமாள் கோவிலில் மாட்டு பொங்கலையொட்டி கணு உற்சவ விழா நடந்தது.

Update: 2023-01-16 19:00 GMT

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மாட்டு பொங்கலையொட்டி கணு உற்சவ விழா நடந்தது. விழாவில் பத்மாவதி தாயாருக்கு நேற்று அதிகாலை திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்பாவை வாசிக்கப்பட்டது. பின்பு வருடத்தில் ஒரு முறை நடைபெறும் ஆண்டாள் மற்றும் பத்மாவதி தாயார் உற்சவ மூர்த்தி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்