நீடாமங்கலம் பகுதியில் காந்தி பிறந்த நாள் விழா
நீடாமங்கலம் பகுதியில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நீடாமங்கலத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தியின் முழு உருவ சிலைக்கு, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் திராவிடமணி, கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.