கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவையை அடுத்த அன்னூரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி விற்பனை செய்ததாக செந்தில்குமார் (வயது 45) என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் செந்தில்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் ஆசாமிகள் 8 பேர் உள்பட 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.