கஞ்சா விற்ற2 பேர் பிடிபட்டனர்

கஞ்சா விற்ற2 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-04-04 18:45 GMT


விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் திருப்பச்சாவடிமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த விழுப்புரம் அருகே புருஷானூரை சேர்ந்த போர்மன்னன் மகன் விஜயகுமார் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார், பழைய சிந்தாமணி சாலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச்சேர்ந்த தனபால் (65) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்