தேனி-கம்பம் சாலையில் வீரபாண்டி புறவழிச்சாலை பிரிவு பகுதியில் தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த கொடித்துரை மகன் ஜெயக்குமார் (வயது 40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வைத்து இருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அப்போது அதில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. அதை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.