கஞ்சா விற்றவர் கைது

மேல்மலையனூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-06 18:12 GMT

மேல்மலையனூர்.

மேல்மலையனூரில் வளத்தி சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைசெல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேல்மலையனூர் எம்.சி.ராஜா நகர் அதியமான் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விஷ்வகார்த்தி (19) என்பதும், பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்