கஞ்சா விற்றவர் கைது
நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை பகுதியில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ்நிலைய பகுதியில் சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 45) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.