கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-21 19:30 GMT

திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, ஏட்டு சந்தியாகு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சீலப்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சீலப்பாடி மேற்கு குழிப்பட்டியை சேர்ந்த விஜய் (வயது 21) என்றும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்தனர். அவரிடம் இருந்த 650 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்