கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-03-29 18:45 GMT

தியாகதுருகம், 

ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம், நரசிபட்டணம் அருகே கப்பாடா கிராமத்தை சேர்ந்தவர் பாபு நாயுடு என்கிற பெட்ல அப்பல நாயுடு (வயது 48). இவர் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்தபோது, உளுந்தூர்பேட்டையில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து பெட்ல அப்பல நாயுடுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு மாவட்ட கலெக்டா் ஷ்ரவன்குமாா் உத்தரவிட்டார். அதன்பேரில் பெட்ல அப்பல நாயுடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்