கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-09-11 20:07 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம், வடக்கூர் நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 32). இவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கூர் கீழநத்தம் கண்ணம்மன் காலனியை சேர்ந்த ராமன் மகன் இசக்கிமுத்து (20), மேலூர் கீழநத்தம், சண்முகவிலாஸ் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மாயாண்டி என்ற பல்லா மாயாண்டி (22) ஆகிய இருவரும் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரை செய்தார். கலெக்டர் கார்த்திகேயன் இந்த பரிந்துரையை ஏற்று இசக்கிமுத்து மற்றும் மாயாண்டி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேலபாண்டவர்மங்களம், அக்ரகார தெருவை சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (26) என்பவர் மானூர் பகுதியில் அடிதடி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு, மானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரும் கலெக்டர் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்