கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-04-06 21:41 GMT

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பிள்ளைமாநகர் அருகில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி செபாஸ்டியன் (வயது 29) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 பேர் குடிபோதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இதை தட்டிக்கேட்க வந்த அவருடைய தம்பி பூமிநாதனையும் (27) அவர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பூமிநாதன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோக்கியஜோஸ் மில்டன் (25), ரெஜிஸ் (23), ஜான்பிரிட்டோ (32), கிதியோன் ஜார்க் ஜோஸ்கி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காந்திமார்க்கெட் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பூமிநாதன் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆரோக்கிய ஜோஸ் மில்டன், ரெஜிஸ் ஆகியோர் பொது இடங்களில் குற்றம் செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எண்ணம் கொண்டவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்