வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-10-21 19:29 GMT

பல்வேறு வழக்குகள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண் பாண்டியன் (வயது 42). இவர் தற்போது அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சமத்துவபுரத்தில் வசித்து வந்தார். இவர் மீது தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம் 21-ந்தேதி அருண் பாண்டியன் வழிப்பறியில் ஈடுபட்டார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 23-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டு, அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்தநிலையில், அருண் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்பதாலும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம் பரிந்துரை செய்தார். அதன்படி, போலீஸ் சூப்பிரண்டின் மேல் பரிந்துரையை ஏற்று அருண் பாண்டியனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார்.

அதன்படி, அருண் பாண்டியன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்