விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சின்ன தடாகத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-19 17:00 GMT

துடியலூர்

துடியலூரை அடுத்துள்ள சின்ன தடாகத்தில் பழமையான ஸ்ரீ வெள்ளி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா 17-ந் தேதி விநாயகர் பூஜை, நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கால பூஜை, 108 மூலிகை ஹோமம், அஷ்ட பந்தனம் சாத்துதல், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.


இதில், பெரியதடாகம் லலிதாம்பிகா பீடம் ஸ்ரீலஸ்ரீ ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் அனுவாவி சுப்ரமணியர் கோவில் சிவாகம் கலாமணி ஆதிஸ்வர சிவாச்சாரியார் யாக பூஜையை நடத்தினார். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேகம் பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்