வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வானவன்மகாதேவி சக்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக மகாலட்சுமி ஹோமங்கள், வாஸ்து சாந்தி யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று 4-ம் கால யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு கடம்புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.