சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. நேற்று மாலை விநாயகர் சிலைகள் அனைத்தும் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து சிலை ஊர்வலம் தொடங்கியது. இதில் செங்குந்த முன்னேற்ற சங்க செயலாளர் மாரிமுத்து, இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதி நாதன், மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி நகரத் தலைவர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னிய ராஜன், பா.ஜனதா கட்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், கல்வியாளர் பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வர பெருமாள், நகர தலைவர் கணேசன், இளைஞரணி தலைவர் விக்னேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் சுவாமி சன்னதியில் இருந்து தொடங்கி மெயின் ரோடு, ராஜபாளையம் சாலை, கீதாலயா தியேட்டர் ரோடு, திருவேங்கடம் சாலை, புதுமனை தெரு, மாதா கோவில் தெரு, ரதவீதிகள் வழியாக மேள தாளங்களுடன் மீண்டும் கோவில் வாசல் முன்பு வந்தடைந்தது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது.