சாத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம்

சாத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-02 19:57 GMT

சாத்தூர், 

சாத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சாத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலையில் முக்குராந்தல், இருக்கன்குடி, படந்தால், ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், கண்மாய்சூரங்குடி அமீர்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு பணி

முக்குராந்தல் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மெயின் ரோடு வழியாக வந்து பிள்ளையார் கோவில் தெரு தென்வடல் புது தெரு, காமராஜபுரம் பகுதி வழியாக வந்து நகர் பகுதியில் ஊர்வலம் முடிந்தது. விநாயகர் சிலை கீழசெல்லையாபுரத்தில் உள்ள கல்குவாரி பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தி கரைக்கப்பட்டது.

ஊர்வலத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகனசுந்தரம், சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேவமாதா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்