தர்காவில் கந்தூரி விழா

திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலம் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-07-20 18:45 GMT

திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலம் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்தூரி விழா

திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலத்தில் பாவா சையது, சையது சதாத், அகமது மவுலானா ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த புகழ்பெற்ற தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இ்ந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 21 நாட்கள் நடக்கிறது.

சந்தனக்கூடு ஊர்வலம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் அடுத்த மாதம் 4-ந் தேதி நடக்கிறது. அதனை தொடர்ந்து கந்தூரி திருவிழா 8-ந் தேதி நடக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை நபிகள் நாயகத்தின் புகழ் மாலை நிகழ்ச்சி நடக்கிறது.

கொடியேற்று விழாவில் திருவாரூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும், குறிப்பாக அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், கள்ளிக்குடி, பழையவலம், கிடாரம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்