மாட்டு வண்டி போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2023-05-14 19:00 GMT

ஓட்டப்பிடாரம்:

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி போட்டி

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. போட்டிக்கு வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி தலைமை தாங்கினார். வைப்பார் இளைய ஜமீன்தார் செந்தில்குமார் முன்னிலை வைத்தார்.

போட்டியானது பாஞ்சாலங்குறிச்சி-ஓட்டப்பிடாரம்- பசுவந்தனை சாலையில் நடந்தது. நடுமாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடந்தது.

பரிசு

நடுமாட்டு வண்டி போட்டி 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இதில் 8 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை சண்முகபுரம் தொழிலதிபர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை வேலாங்குளம் கண்ணன் வண்டி முதல் இடம் பிடித்தது. அந்த அணிக்கு பரிசாக ரூ.71 ஆயிரம் வழங்கப்பட்டன. 2-ம் இடம் பிடித்த சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் வண்டிக்கு ரூ.61 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு வண்டிக்கு ரூ.51 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

சிறிய மாட்டு வண்டி போட்டி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இதில் 19 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் பரிசசை சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் வண்டி தட்டிச் சென்றன. அந்த வண்டிக்கு பரிசாக ரூ.51 ஆயிரம் வழங்கப்பட்டன. 2-வது இடம் பிடித்த நெல்ைல வேலாங்குளம் கண்ணன் வண்டிக்கு ரூ.41 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த வள்ளியூர் ஆனந்த தேவர் வண்டிக்கு ரூ.31 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

சீறிப்பாய்ந்து சென்றன

இதேபோல் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 21 வண்டிகள் கலந்து கொண்டனர். இதில் ஆதனூர் செல்வம் மாட்டு வண்டி முதல் பரிசை தட்டி சென்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.31 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த பாஞ்சாலங்குறிச்சி பாலஹரிகரன் வண்டிக்கு ரூ.21 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த வைப்பார் ராம் வண்டிக்கு ரூ.11 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை காண சாலையின் இருபுறம் ஏராளமான ெபாதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மாட்டு வண்டிகளை கண்டு ரசித்தனர்.

பாதுகாப்பு பணியில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்