சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக ஏகாம்பரேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவன், அம்பாள் உற்வசமூர்த்தி சிலை மும்முறை சுற்றி வரப்பட்டது. இதே போன்று அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.