பவுர்ணமி சிறப்பு வழிபாடு
உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு செல்வ விநாயகர், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.