வாழ்க்கையில் விரக்தி அடைந்த முதியவர் தற்கொலை
வாழ்க்கையில் விரக்தி அடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வாங்கல் மேலசக்கர பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(வயது 61). விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது கையில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கந்தசாமி தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில்அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அவர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.