திருமணம் செய்து வைக்காததால் விரக்தி: தந்தை முன் விஷம் குடித்த வாலிபர் சாவு

தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தந்தையிடம் மதன்குமார் கூறி வந்துள்ளார்.

Update: 2024-02-28 00:09 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா லாலாபுரத்தை சேர்ந்தவர் வடமலை. இவருடைய மகன் மதன்குமார் (வயது 23). இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மதன்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் இன்னும் உனக்கு வயது இருக்கு. சில காலம் போகட்டும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர் விரக்தியுடன் காணப்பட்டு உள்ளார்.

சம்பவத்தன்று வடமலை தோட்டத்தில் இருந்தபோது, அங்கு வந்த மதன்குமார் குடிபோதையில் இருந்துள்ளார். அங்கிருந்த தனது தந்தையிடம், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னால் செய்ய மாட்டாயா? என்று கூறிக் கொண்டே போதையில் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மதன்குமார் இறந்தார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்