வேலூரில் இருந்து எங்கள் வெற்றி பாதை தொடங்கும் -அண்ணாமலை பேச்சு

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் இருந்து எங்கள் வெற்றி பாதை தொடங்கும் என்று சாதனை விளக்க கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

Update: 2023-06-11 23:25 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

வேலூரில் இருந்து தொடங்கும்

வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் இருந்து எங்களுடைய வெற்றி பாதை தொடங்கும். தமிழகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்ற கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் வரும் 9 மாதங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏ.சி.சண்முகம்

கூட்டத்தில் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது:-

வேலூர் கோட்டையில் தாமரை மலர்ந்தே தீரும். வடமாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிபுரிந்து வருகிறது. அதேபோன்று தென்மாநிலங்களிலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சி அமைக்கும். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்தேன்.

கூட்டணி கட்சிகளின் துரோகத்தால்தான் தோல்வி ஏற்பட்டது. கூட்டணி கட்சியினர் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் இருந்து 25 பேரை வெற்றி பெறச்செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்