தூத்துக்குடியில் இருந்துஇலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ பீடி இலை சிக்கியது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ பீடி இலை சிக்கியது

Update: 2023-09-20 18:45 GMT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ பீடி இலை போலீசாரிடம் சிக்கியது. 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் ரோந்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சிலுவைப்பட்டி அருகே உள்ள கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

பீடி இலை மூட்டைகள்

அப்போது, அந்த பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள், 3 சாக்கு மூட்டைகளும் கேட்பாரற்று கிடந்தன. இதனை பார்த்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த மூட்டைகளில் இருந்த 90 கிலோ பீடி இலை மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இலங்கைக்கு கடத்த முயற்சி

பின்னர் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகளை பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பீடி இலைகளை கடத்தி வந்து கடற்கரையில் போட்டு ெசன்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்