கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்

Update: 2023-05-31 20:53 GMT

கோபி நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 24 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் 22 நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க.வினர் 12 பேர், சட்ட ஒழுங்கு சீர்கேடு, சாராயம் குடித்ததால் 22 பேர் சாவு மற்றும் போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டதாக கூறி அதை கண்டித்து கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலகத்துக்கு முன்பு நின்று கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்