தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 1,250 டன் புழுங்கல் அரிசிஈரோடு வந்தது

அரிசிஈரோடு வந்தது

Update: 2022-12-14 21:28 GMT

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட மக்களுக்கு பொதுவினியோக திட்டத்தில் வினியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 1,250 டன் புழுங்கல் அரிசி தஞ்சாவூரில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயிலில் நேற்று ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் அந்த லாரிகள் ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்