தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வாகன தணிக்கை

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-16 18:45 GMT

கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் குமுளிக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், இருசக்கர, வாகனங்கள் மூலமாகவும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி உத்தரவின்பேரில், கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் முகுந்தன், செல்வராஜ் ஆகியோர் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மந்தை வாய்க்கால் பாலம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்களை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர். இதேபோல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களை நிறுத்தி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுகிறதா என்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்