பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

Update: 2023-10-09 23:50 GMT

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியாகவும், நேற்று மதியம் 12 மணி முதல் வினாடிக்கு 650 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்