மோட்டார் சைக்கிளிலிருந்துதவறி விழுந்த டீக்கடைக்காரர் சாவு

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த டீக்கடைக்காரர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-05-10 18:45 GMT

ஏரல்:

முக்காணி பண்ணையார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் முக்காணியில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் நாசரேத் அருகே உள்ள கடையனோடையில் உள்ள அவரது தம்பி நயினார் என்பவர் வீட்டு கோவில் கொடை விழாவுக்கு சென்றிருந்தார். விழா முடிந்த நிலையில் நேற்று அதிகாலையில் கடையனோடையில் இருந்து அவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். ஏரல் அம்மாள் தோப்பு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி அருகில் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மாசானம் அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்