10-ந்தேதி முதல் திருச்சி வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 10-ந்தேதி முதல் திருச்சி வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-02-08 14:48 GMT

மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 10-ந்தேதி முதல் திருச்சி வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இணைப்பு பணிகள்

பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரெயில் இயக்கவும் மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக திருச்சி, மதுரை வழியாக இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரெயில்களில் சில முழுமையாகவும், சில பகுதியாகவும் ரத்து செய்யப்படுவதுடன் சில ரெயில்கள் மானாமதுரை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதில் முழுமையாக ரத்து செய்யப்படும் ரெயில்கள் விவரம் வருமாறு:-

முழுமையாக ரத்து

வருகிற 16, 17, 19, 23, 24, 26-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரெயில் (16780), வருகிற 17, 18, 20, 24, 25, 27-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரெயில் (16779), வருகிற 16, 17, 20, 21, 23, 24, 27, 28-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை-காரைக்குடி பல்லவன் விரைவு ரெயில் (12605), வருகிற 17, 18, 21, 22, 24, 25, 28-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1, 4-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி-சென்னை பல்லவன் விரைவு ரெயில் (12606) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி-கன்னியாகுமரி

இதுபோல் வருகிற 16, 18, 23, 25-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை-சென்னை மஹால் விரைவு ரெயில் (22624), வருகிற 17, 19, 24, 26-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை-மதுரை மஹால் விரைவு ரெயில் (22623), வருகிற 26-ந்தேதி புறப்பட வேண்டிய புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரெயில் (16861), வருகிற 27-ந்தேதி புறப்பட வேண்டிய கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரெயில் (16862), வருகிற 27-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம்-நாகர்கோவில் ரெயில் (22657), வருகிற 28-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில்-தாம்பரம் விரைவு ரெயில் (22658) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி

அத்துடன் மார்ச் மாதம் 2, 3-ந்தேதிகளில் திருச்சி-திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628), மார்ச் மாதம் 2-ந்தேதி சென்னை-நாகர்கோவில் விரைவு ரெயில் (12667), மார்ச் மாதம் 3-ந்தேதி அன்று நாகர்கோவில்-சென்னை விரைவு ரெயில் (12668), மார்ச் மாதம் 5-ந்தேதி விழுப்புரம்-மதுரை விரைவு ரெயில் (16867), மார்ச் மாதம் 6-ந்தேதி மதுரை-விழுப்புரம் ரெயில் (16868) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து

அதுபோல் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படும் ரெயில்கள் விவரம் வருமாறு:-

வருகிற 17-ந்தேதி முதல் மார்ச் மாதம் 3-ந்தேதி வரை மதுரை-சென்னை வைகை விரைவு ரெயில் (12636), வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி வரை சென்னை-மதுரை வைகை விரைவு ரெயில் (12635), வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் மாதம் 3-ந்தேதி வரை மதுரை-சென்னை பாண்டியன் விரைவு ரெயில் (12638), வருகிற 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி வரை சென்னை-மதுரை பாண்டியன் விரைவு ரெயில் (12637), வருகிற 9, 16-ந்தேதி ஆகிய நாட்களில் மதுரை-பிகானீர் விரைவு ரெயில் (22631) ஆகிய ரெயில்கள் கூடல் நகர்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

இதுபோல் வருகிற 28-ந்தேதி நிஜாமுதீன்-மதுரை சம்பர்க் கிரந்தி விரைவு ரெயில் (12652), வருகிற 11, 18, 25-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காச்சிகுடா -மதுரை விரைவு ரெயில் (17615), வருகிற 12, 19, 26-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை-காச்சிகுடா விரைவு ரெயில் (17616), வருகிற 6-ந்தேதி முதல் மார்ச் மாதம் 4-ந்தேதி வரை விழுப்புரம்-மதுரை விரைவு ரெயில் (16867) மற்றும் வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி வரை மதுரை-விழுப்புரம் ரெயில் (16868) ஆகியவை திண்டுக்கல்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியுடன் நிறுத்தம்

மேலும் வருகிற 10-ந்தேதி முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி வரை சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் அதிவிரைவு ரெயில்கள் (22671/22672), வருகிற 23-ந்தேதி, மார்ச் மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை-பிகானீர் விரைவு ரெயில் (12631), வருகிற 19, 26-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பிகானீர்- மதுரை விரைவு ரெயில் (22632) ஆகியவை திருச்சி-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மார்ச் மாதம் 1, 2, 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16106), வருகிற 28 மற்றும் மார்ச் மாதம் 1, 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை-திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ஆகியவை திருச்சி-திருச்செந்தூர் இடையேயும், மார்ச் மாதம் 1, 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரெயில் (20691), மார்ச் மாதம் 2, 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில்-தாம்பரம் விரைவு ரெயில் (20692) ஆகியவை திருச்சி-நாகர்கோவில் இடையேயும், மார்ச் மாதம் 1, 2, 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் (16847), மார்ச் மாதம் 2, 3, 4-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (16848) ஆகியவை திருச்சி-செங்கோட்டை இடையேயும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

விழுப்புரம்

இதுபோல் வருகிற 14, 16, 21, 23-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நிஜாமுதீன்-மதுரை சம்பர் கிரந்தி விரைவு ரெயில் (12652), வருகிற 19, 21, 26, 28-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை-நிஜாமுதீன் சம்பர் கிரந்தி விரைவு ரெயில் (12651), வருகிற 15, 22-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை குர்லா-மதுரை விரைவு ரெயில் (22101), வருகிற 17, 24-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை-மும்பை குர்லா விரைவு ரெயில் (22102) ஆகியவை விழுப்புரம்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 12, 19, 26-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பனாரஸ்-ராமேசுவரம் (22536), வருகிற 15, 22-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரெயில் (22535), வருகிற 18, 25-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய அஜ்மீர்-ராமேசுவரம் ரெயில் (20973), வருகிற 21, 28-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேசுவரம்-அஜ்மீர் விரைவு ரெயில் (20974) ஆகியவை விழுப்புரம்-ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

வருகிற 24, 25-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை-செங்கோட்டை சிலம்பு ரெயில் (20681), வருகிற 25, 26-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை-சென்னை சிலம்பு ரெயில் (20682) ஆகியவை காரைக்குடி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மானாமதுரை வழியாக மாற்றம்

அதுபோல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் விவரம் வருமாறு:-

வருகிற 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மற்றும் மார்ச் மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர்-சென்னை செந்தூர் விரைவு ரெயில் (16106), வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சென்னை-திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரெயில் (16105) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதுபோல் வருகிற 9-ந்தேதி முதல் மார்ச் மாதம் 1-ந்தேதி வரை மற்றும் மார்ச் மாதம் 5, 6-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (16848), மேலும், வருகிற 5-ந்தேதி முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி வரை குருவாயூர்-சென்னை ரெயில் (16128), மார்ச் மாதம் 1, 2, 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை-குருவாயூர் ரெயில் (16127), வருகிற 11, 18, 25-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில்-கச்சக்குடா ரெயில் (16354) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மானாமதுரையில் நின்று செல்லும்

வருகிற 9, 12, 16, 19, 23, 26-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 2, 5-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில்-மும்பை ரெயில் (16352), வருகிற 11, 18, 25-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி-ஹவுரா ரெயில் (12666), வருகிற 23-ந்தேதி முதல் மார்ச் மாதம் 3-ந்தேதி வரை செங்கோட்டை-சென்னை பொதிகை ரெயில் (12662), வருகிற 28-ந்தேதி முதல் மார்ச் மாதம் 3-ந்தேதி வரை நெல்லை-சென்னை நெல்லை விரைவு ரெயில் (12632), மார்ச் மாதம் 1, 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம்-சென்னை ரெயில் (16102), மார்ச் மாதம் 1, 2, 3-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம்-சென்னை அனந்தபுரி ரெயில் (16824) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும் வருகிற 5, 12, 19, 26 மற்றும் மார்ச் மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா-நாகர்கோவில் ரெயில் (16353), வருகிற 23-ந்தேதி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி வரை சென்னை-செங்கோட்டை பொதிகை ரெயில் (12661), மார்ச் மாதம் 1, 2-ந்தேதி புறப்பட வேண்டிய சென்னை-நெல்லை நெல்லை விரைவு ரெயில் (12631), வருகிற 28-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1, 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை-கொல்லம் ரெயில் (16101) திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்வதோடு மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்