அடிக்கடி மின்தடை

அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-01-16 19:15 GMT

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது சேலத்தார் காடு கிராமம். இந்த கிராமத்தில் அதிக அளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் வழியாக பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் நடந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டிக்கு தென்புறத்தில் செல்லும் மின் கம்பிகளுக்கு நடுவே இடையூறாக பனை மரத்தின் பச்சை மட்டைகள் உரசுவதாலும், மின்கம்பிகள் காற்றில் ஒன்றோடொன்று உரசுவதாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்