சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா: உருவ சிலைக்கு அமைச்சர்- அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

Update: 2022-10-05 21:02 GMT

சிவகிரி

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவ சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் அரசியில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்

சிவகிரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா கொடிகாத்த தியாகி திருப்பூர் குமரன் பேரவை சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பேரவை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ் தங்கமணி முன்னிலை வகித்தார். செயலாளர் மீனாசுந்தரம் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு தியாகி திருப்பூர் குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் இளஞ்செழியன், கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தியாகி குமரன் உருவ சிலைக்கு ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி பேரூராட்சி

சிவகிரி பேரூராட்சி சார்பில் அதன் தலைவர் பிரதீபா கோபிநாத், கலந்து கொண்டு தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பேரூராட்சி துணைத்தலைவர் கோபால், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொ.ம.தே.க.- அ.ம.மு.க.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி கலந்து கொண்டு தியாகி குமரன் உருவ சிைலக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கொடுமுடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சண்முகவேல் கலந்து கொண்டு தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் சிவப்பிரசாத், வெங்கடேஷ், சரவணன், ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்,

காங்கிரஸ்- பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி கலந்துகொண்டு தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பா.ஜ.க. சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய துணைத்தலைவி கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகிரி நகர செயலாளர் வரதராஜ் கலந்து கொண்டு தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் செயலாளர் சசி கலந்து கொண்டு தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழா முடிவில் கொடிகாத்த தியாகி குமரன் பேரவை பொருளாளர் பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்