அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ.இலவச பாடபுத்தகங்கள் வழங்கினார்
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வழங்கி பேசினார். இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 2,150 மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, பேரூராட்சி உறுப்பினர்கள் மாரிதாசன், சித்ராதேவி ஆறுமுகம், பத்மாவதி முத்துக்குமார், ராமலெட்சுமி பாலகிருஷ்ணன் மற்றும் மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை தேவிகாராணி நன்றி கூறினார்.