மண்மங்கலம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்மங்கலம் கால்நடை உதவி மருத்துவர் ஜீவரத்தினம் வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கரூர் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். இதில், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.