கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை முடிவடைகிறது.

Update: 2022-05-24 15:40 GMT

சென்னை,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்ட பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் 18-ந் தேதி(நாளை) முடிவடைய இருந்த நிலையில், 25-ந் தேதி(நாளை) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளை முடிவடைகிறது. இதனை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்