வேலூரில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
69-வது கூட்டுறவு வார விழாவையொட்டி வேலூர் கற்பகம் சிறப்பு அங்காடியில் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நேற்று நடந்தது. பண்டகசாலை இணை பதிவாளர் நந்தகுமார் முகாமை தொடங்கி வைத்தார்.
துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன் மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார்.
சித்த மருத்துவர் பாஸ்கரன் வரவேற்றார். முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக சித்த முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் மூலிகைகள் கொண்ட கண்காட்சியில் மூலிகையின் பெயர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.