திருச்செந்தூரில் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருச்செந்தூரில் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-09-28 18:45 GMT

திருச்செந்தூர்:

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருச்செந்தூர் கால்நடை ஆஸ்பத்திரியில் நேற்று செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகமை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜன், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் கோட்டை உதவி இயக்குனர் செல்வகுமார், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சந்தோசம் முத்துக்குமார், கால்நடை உதவி டாக்டர்கள் பொன்ராஜ், ராகவி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரமசக்தி, மாவட்ட‌ அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்