வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-14 13:11 GMT

வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறி நோயினை தடுக்கும் வகையில் வளர்ப்பு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வேலூரில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை வேலூர் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முகாமில் உதவி இயக்குனர் அந்துவன், பிராணிகள் வதை தடுப்பு சங்க பொருளாளர் டாக்டர் பி.பீ.ஆர்.என்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 50 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் உணவு பொருட்கள் கிட் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''வேலூர் மாவட்டத்தில் வளர்ப்பு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிவரை கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, லத்தேரி, திருவலம், பென்னாத்தூர், ஏரிகுத்தி, காட்பாடி, ஒடுகத்தூர் ஆகிய அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் சுமார் 1,600 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இலவச தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்