முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 3 ஆயிரமாவது இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சி, தில்லைநகரில் உள்ள கார்த்திக் சித்த வைத்திய சாலாவில் நேற்று நடந்தது. முகாமிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கியதுடன், பொதுமக்களுக்கு சிகிச்சையும் அளித்தார். டாக்டர்கள் தமிழரசி, கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் 200 பேருக்கு புடவைகள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. வட்டச் செயலாளர் வாமடம் சுரேஷ் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.