அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு வேலூர் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பொதுமக்களுக்கு ஆயுஷ் மருத்துவ முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முகாமை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். முகாமில் 200 பேருக்கு இலவசமாக பரிசோதனை செயது மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.