போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்
போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கண் பரிசோதனை, பல் பரிசோதனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார். இந்த முகாமில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 160 பேர் கலந்து கொண்டனர்.