சேரன்மாதேவி:
கீழச்செவல் நயினார்குளம் சமுதாய நலக்கூடத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அப்பல்லோ பார்மசி, நண்பர்கள் ரத்ததான கண்தாண விழிப்புணர்வு குழு, ஜெ.ஜெ. குருப் ஆப் கம்பெனிஸ் இணைந்து நடத்திய, இலவச கண் சிகிச்சை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் அளவுகள் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. தவசிமணிகண்டன் தலைமை வகித்தார். சரவணன், சிவா, குமரேசன், முருகன், முத்துராஜ், சவுந்தரராஜன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அஞ்சனா, விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு ஆகியோர் இலவச கண் சிகிச்சைகளை மேற்கொண்டனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அளவுகளை அப்பல்லோ பார்மசி மாரியப்பன் செய்தார். இதில் முகாம் மேலாளர் மாணிக்கம் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கண்புரை அறுவை சிகிச்சைக்காக 10 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.