இலவச மருத்துவ முகாம்

வைரவன்கோவில் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-07-16 18:45 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் நட்ராஜ் கார்டியாக் கேர் மற்றும் வைரவன் கோவில் கிராம மக்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான முகாம் நேற்று காலை கூனியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றன. முகாம் நட்ராஜ் இருதய கிளினிக் நிறுவனரும், தலைமை மருத்துவருமான ஜோதிமுருகன் நடராஜன் தலைமை தாங்கினார். முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், கிராம தலைவர் ஆறுமுகம், பொருளாளர் மாரி, செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த அழுத்தம் கண்டறிதல், இருதய நோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான மாத்திரை மருந்துகள் விலை இன்றி வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை நட்ராஜ் கார்டியாக் கேர் மக்கள் தொடர்பு அதிகாரி அன்சாரி, முருகானந்தம் மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்