நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

Update: 2023-02-23 20:14 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று பல்வேறு கோவில்களில் இலவச திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் நெல்லை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன் -உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா சஞ்சல் பிரபாகர் ஜோடி, ராஜவல்லிபுரம் விக்னேஷ் -தச்சநல்லூர் பூர்ணிமா மற்றும் அருகன்குளம் குமார் -பள்ளமடை மணிமேகலா ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அவர்களுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் ஊழியர்கள் 33 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்