இலவச சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம்

திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இலவச சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-10 20:15 GMT

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இலவச சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வக்கீல் வைத்து குற்ற வழக்குகளை நடத்த இயலாத ஏழைகளுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கப்படுகிறது. இதற்காக 4 வக்கீல்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த அலவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் இலவச சட்ட உதவிக்காக நியமிக்கப்பட்ட வக்கீல்கள் ஜேம்ஸ்இளங்கோ, கார்த்திகேயன், லயோலா ஷீபா ஜோஸ், முனீஸ்வரி ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை நீதிபதி வழங்கினார்.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், நீதிபதிகள் சரண், ஜான்மினோ, ராமச்சந்திரன், தீபா, சாமுண்டீஸ்வரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனா மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்